2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

நேட்டோ தாக்குதலில் 5 பொதுமக்கள் பலி

Suganthini Ratnam   / 2011 ஜூன் 19 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

லிபியத் தலைநகர் திரிபோலியிலுள்ள வீடொன்றின் மீது இன்று ஞாயிற்றுக்கிழமை காலை மேற்கொள்ளப்பட்ட நேட்டோ படையினரின் விமானத் தாக்குதலில் ஐந்து பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக அந்த நாட்டு அரசாங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், இந்த விமானத் தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர்.  

இந்த விமானத் தாக்குதலின்போது மூன்று மாடிகளைக் கொண்ட இந்த வீடு  மோசமாக சேதமடைந்துள்ளது.

இந்த விமானத் தாக்குதல் நேட்டோ அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது. இந்த விமானத் தாக்குதல் இலக்குத் தவறி இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, லிபிய எதிர்க்கட்சிகளின் வாகனங்கள் மீது கடந்த வியாழனன்று தவறுதலாக இடம்பெற்ற தாக்குதல் குறித்து தான் வருந்துவதாக நேட்டோ தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .