2020 செப்டெம்பர் 24, வியாழக்கிழமை

நியூஸிலாந்தில் பூமியதிர்ச்சி; 65 பேர் பலி

Suganthini Ratnam   / 2011 பெப்ரவரி 22 , மு.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நியூஸிலாந்தில் ஏற்பட்ட பூமியதிர்ச்சியில் குறைந்த பட்சம் 65 பேர் பலியாகியுள்ளதாக அந்த நாட்டு பிரதமர் ஜோன் கீ தெரிவித்துள்ளார்.

நியூஸிலாந்தின் தென் தீவு, கிறைஸ்ட் சேர்ச் பகுதியிலேயே இந்த  பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. நியூஸிலாந்து நேரப்படி செவ்வாய்க்கிழமை நண்பகல் இந்த பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.  இந்த பூமியதிர்ச்சி ரிச்டர் அளவுத்திட்டத்தில் 6.3ஆக பதிவாகியுள்ளது.

பாரியளவில் கட்டட இடிபாடுகள் இடம்பெற்றுள்ளதுடன், இக்கட்டட இடிபாடுகளுக்கிடையில் பொதுமக்கள் பலர் சிக்கியுள்ளதாக தீயணைப்புப் படையினர் தெரிவித்தனர்.

நியூலாந்தில் பூமியதிர்ச்சி இடம்பெற்றதைத் தொடர்ந்து அங்கு அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--