Editorial / 2018 செப்டெம்பர் 18 , மு.ப. 12:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவின் தமிழகத்தில், நீதிமன்றம் மீதும் பொலிஸார் மீதும் அவதூறான கருத்துகளை வெளிப்படுத்திய, பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச். ராஜா மீது, 8 பிரிவுகளில் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. எச். ராஜா தவிர, மேலும் 7 பேர் மீதும், இவ்வாறு வழக்குப் பதிவுசெய்யப்பட்டது.
விநாயகர் சதுர்த்தியன்று, ஊர்வலம் நடத்துவதற்காகப் பொலிஸாரால் விதிக்கப்பட்ட தடையைத் தொடர்ந்து, குழப்பம் ஏற்பட்டிருந்தது. அதன்போதே, அவதூறான இக்கருத்துகளை ராஜா வெளிப்படுத்தியதோடு, அவரைக் கைதுசெய்ய வேண்டுமென்ற கோரிக்கைகள் எழுந்தன.
இந்நிலையிலேயே, சட்டத்தை மதிக்காமை, இரு தரப்பினருக்கு இடையே மோதலைத் தூண்டியமை, நீதிமன்றத்தைப் பற்றி அவதூறாகப் பேசியமை உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ், ராஜா உள்ளிட்ட எண்மர் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது
திருமயம் பொலிஸ் நிலையத்தில் வழங்கப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்தே, இவ்வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
இது தொடர்பான வழக்குகளுக்காக, 4 வாரங்களில், சென்னை உயர்நீதிமன்றத்தில் ராஜா ஆஜராக வேண்டுமென, உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
தமிழகத்தில் அதிகமாக ஆதிக்கம் செலுத்தும் மதசார்பற்ற கட்சிகள், தலைவர்கள், செயற்பாட்டாளர்கள் ஆகியோரின் கடுமையான அழுத்தத்தின் பின்னரே, இவ்வாறான நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், எச். ராஜா கைதுசெய்யப்படுவாரா என்பது, சந்தேகத்துக்குரியதாகவே உள்ளது. ஏற்கெனவே, பெண் ஊடகவியலாளர்கள் மீது அவதூறாகப் பேசியமை தொடர்பாகப் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட பின்னரும், பா.ஜ.கவைச் சேர்ந்த முக்கியஸ்தரான எஸ்.வி. சேகர், இதுவரை கைதுசெய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
5 minute ago
17 minute ago
24 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
17 minute ago
24 minute ago
31 minute ago