2021 ஏப்ரல் 21, புதன்கிழமை

ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் வாசஸ்தலத்தில் 98 கிலோ தங்கம், 307 கிலோ வெள்ளி

Super User   / 2011 ஜூன் 17 , பி.ப. 03:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஜீவ சமாதியடைந்த ஸ்ரீ சத்ய சாய்; பிரத்தியேக வாசஸ்தல மண்டபத்திலிருந்து 98 கிலோகிராம் தங்கம், 307 கிலோகிராம் வெள்ளி மற்றும் 11.56 கோடி ரூபா பணம் என்பன இன்று வெள்ளிக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

புட்டபர்த்தியிலுள்ள பிரசாந்தி நிலையத்தில் யஜுர்வேத மந்திரம் எனும் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் பிரத்தியேக வசிப்பிடத்தை சத்ய சாய் சேவா அறக்கட்டளை அங்கத்தவர்களால் ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.பி. மிஷ்ரா முன்னிலையில் நேற்று திறக்கப்பட்டது.

இன்று வெள்ளிக்கிழமை அங்கு சத்ய சாய் சேவா நிலையத்தினர்   நீதிபதி ஏ.பி. மிஷ்ரா முன்னிலையில் ஆராய்ந்த போதே இத்தங்கம், வெள்ளி மற்றும் பணம் காணப்பட்டது.

வருமான வரித்துறையினால் அங்கீகரிக்கப்பட்ட மதிப்பீட்டாளர் ஒருவரும் இப்பொருட்களின் பெறுமதியை மதிப்பிடுவதற்கு உதவுவதற்காக அங்கு சமுகமளித்திருந்தார் என ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் மருமகனும் மேற்படி அறக்கட்டளையின் அங்கத்தவருமான ஆர்.ஜே. ரட்னாகர் தெரிவித்துள்ளார்.

இப்பணம் அறக்கட்டளையின் பெயரில் வங்கியில் வைப்பிலிடப்பட்டதாகவும் அவர் கூறினார்.

கடந்த மார்ச் 28 ஆம் திகதி அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதிலிருந்து அவரின் பிரத்தியேக வாசஸ்தல மண்டபம், மூடப்பட்டிருந்தது. கடந்த ஏப்ரல் 24  ஆம் திகதி ஸ்ரீ சத்ய சாய் பாபா ஜீவ சமாதியடைந்தமை குறிப்பிடத்தக்கது.
 


  Comments - 0

  • xlntgson Saturday, 18 June 2011 09:18 PM

    இவ்வளவுதானா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .