2025 டிசெம்பர் 31, புதன்கிழமை

அகதிகள் 50 பேர் அரபிக் கடலில் மூழ்கியுள்ளதாக அச்சம்

Nirshan Ramanujam   / 2017 ஓகஸ்ட் 10 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

சோமாலியா மற்றும் எத்தியோப்பிய நாடுகளைச் சேர்ந்த 50 இற்கும் மேற்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் அரபிக் கடலில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

யேமனை நோக்கிப் படகில் பயணித்த அவர்களை கடத்தல்காரர்கள் நடுக்கடலில் விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது.

குறித்த படகில் எத்தனைபேர் இருந்தார்கள் என்பதை துல்லியமாக கணிப்பிட்டுக் கூற முடியாதுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யேமனை நோக்கிப் படகு சென்றுகொண்டிருந்த வேளை, பாதுகாப்பு அதிகாரிகள் படகினை அண்மித்து வருவதாகத் தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து புகலிடக் கோரிக்கையாளர்களை பணத்துக்காக கடத்திச் செல்லும் நபர்கள், பிரத்தியேக படகில் தப்பிச் சென்றுள்ளதாக அகதிகளுக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.

இதனால் சுமார் 50 இற்கும் மேற்பட்டோர் கடலில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் முதல் 55 ஆயிரம் புகலிடக் கோரிக்கையாளர்கள் யேமன் ஊடாக மேற்குலக நாடுகளை சென்றடைந்துள்ளனர். இவர்களில் 30 ஆயிரம் பேர் 18 வயதுக்குக் குறைந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

கடல் மார்க்கமாக மிகவும் ஆபத்தான பயணம் மேற்கொள்வதால் உயிரிழப்புகளும் அதிகம் என சர்வதேச அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X