2021 மார்ச் 01, திங்கட்கிழமை

‘அணுவாயுதக் கொள்ளளவை ஈரான் கட்டியெழுப்புகிறது’

Shanmugan Murugavel   / 2021 ஜனவரி 17 , மு.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஈரானானது, அதன் அணுவாயுதக் கொள்ளவுகளை கட்டியெழுப்பும் நடவடிக்கையில் உள்ளதாகவும், ஈரானும், ஐக்கிய அமெரிக்காவும் 2015ஆம் ஆண்டு அணு ஒப்பந்தத்துக்கு திரும்புவது அவசரம் என பிரான்ஸின் வெளிநாட்டமைச்சர் ஜீன் யுவெஸ் லீ ட்ரியன், நேற்று வெளியான ஜேர்னல் டு டிமன்ஞ்சே பத்திரிகை நேர்காணலொன்றில் தெரிவித்துள்ளார்.

ஈரான் மீதான அதிகூடிய அழுத்தமென்று கூறியதை ஐ. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பி நிர்வாகம் முன்னெடுத்ததாகவும், இத்தந்திரபாயத்தின் முடிவானது ஆபத்தை அதிகரித்தது மட்டுமே ஆகும் என லீ ட்ரியன் கூறியுள்ளார்.

இதேவேளை, ஈரானும், ஐ. அமெரிக்காவும் அணு ஒப்பந்தத்துக்கு திரும்புவது போதாதெனவும் லீ ட்ரியன் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .