Editorial / 2021 ஏப்ரல் 07 , பி.ப. 01:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகளவில் கொரோனாத் தொற்றினால் அதிகளவில் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்திலுள்ளது.
இதன் காரணமாக அந் நாட்டில் தடுப்பூசி செலுத்தும் பணியானது தீவிரப்படுத்தப்பட்டுவருகின்றது.
இந் நிலையில் அமெரிக்காவில் இம் மாதம் 19 ஆம் திகதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர் அனைவரும் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்வதற்கான தகுதியினைப் பெறுவர் என அந்நாட்டு ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
வௌ்ளை மாளிகையில் நேற்றைய தினம் இடம் பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் கொரோனாத் தொற்றுப் பரவலால் பாதிக்கப்பட்டுள்ள அந் நாட்டின் பொருளாதார அதிகார மையமான கலிபோர்னியாவின் அனைத்து வணிக நடவடிக்கைகளையும் ஜூன் மாதம் 15 ஆம் திகதிக்குள் முழுமையாக மீண்டும் ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
57 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
1 hours ago
1 hours ago