2021 பெப்ரவரி 27, சனிக்கிழமை

அமைதியின்மையை அடக்க இராணுவத்தை தரையிறக்கிய துனீஷியா

Shanmugan Murugavel   / 2021 ஜனவரி 19 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நாள் கணக்கான சமூக அமைதியின்மையை அடக்குவதற்கு உதவுவதற்காக இராணுவப் பிரிவுகளை துனீஷியா தரையிறக்கியுள்ளது.

இச்சமூக அமைதியின்மையின்போது பல்வேறு நகரங்களில் இளைஞர்களால் வன்முறையான போராட்டங்கள் நடாத்தப்பட்டிருந்தன. பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட நூற்றுக்கணக்கானோரை விடுவிக்க வலியுறுத்தி வீதிகளில் ஆர்ப்பாட்டக்காரர்கள் இறங்கிய நிலையிலேயே இவ்வாறான வன்முறையான போராட்டங்கள் இடம்பெற்றிருந்தன.

மோசமான நிலையிலிருக்கும் பொருளாதாரம், அரச சேவைகள் குறித்து துனீஷியர்கள் கோபமாக இருக்கின்றனர்.

அமைதியின்மை ஆரம்பித்ததிலிருந்து ஏறத்தாழ 1,000 கைதுகளை அதிகாரிகள் மேற்கொண்டதாக உள்நாட்டமைச்சு தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .