2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

ஆயுதந்தரித்த ஆர்ப்பாட்டங்கள் குறித்து எஃப்.பி.ஐ எச்சரிக்கை

Shanmugan Murugavel   / 2021 ஜனவரி 12 , மு.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஐக்கிய அமெரிக்கத் தலைநகர் வொஷிங்டனிலும், அனைத்து ஐ. அமெரிக்க மாநிலத் தலைநகர்களிலும் ஆயுதந்தரித்த போராட்டங்கள் திட்டமிடப்படுவதாக அந்நாட்டின் புலன் விசாரணை கூட்டாட்சிப் பணியகம் (எஃப்.பி.ஐ) எச்சரித்துள்ளதாக அந்நாட்டின் மத்திய சட்ட அமலாக்கல் தகவல் மூலமொன்று நேற்று தெரிவித்துள்ளது.

ஐ. அமெரிக்காவின் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள ஜோ பைடன் எதிர்வரும் புதன்கிழமை பதவியேற்பதையொட்டியே இவ்வாறு போராட்டங்கள் திட்டமிடப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் வாரயிறுதியிலிருந்து குறைந்தது பதவியேற்கும் நாள் வரையிலும் எச்சரிக்கைகளை எஃப்.பி.ஐ விடுத்துள்ளதாக குறித்த தகவல் மூலம் குறிப்பிட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .