2021 மார்ச் 01, திங்கட்கிழமை

இந்தோனேஷியா நிலநடுக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 56

Shanmugan Murugavel   / 2021 ஜனவரி 17 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


இந்தோனேஷியாவின் மேற்கு சுலாவெசி மாகாணத்தை நேற்று முன்தினம் தாக்கிய நிலநடுக்கமொன்றையடுத்து, குறைந்தது 56 பேர் கொல்லப்பட்டதாக இடர் தணிப்பு முகவரகம் இன்று தெரிவித்துள்ளது. 

6.2 றிச்டர் அளவிலான நிலநடுக்கத்தையடுத்து 820க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும், 15,000 பேரளவில் வீடுகளை விட்டு வெளியேறியதாகவும் குறித்த முகவரகம் மேலும் குறிப்பிட்டுள்ளது. 

சிலர் மலைகளில் அடைக்கலம் புகுந்ததுடன், ஏனையவர்கள் வெளியேற்றல் நிலையங்களுக்குச் சென்றதாக அங்குள்ளவர்கள் கூறியுள்ளனர். 

இந்நிலையில், இப்பிராந்தியத்தில் இன்னொரு நிலநடுக்கமானது சுனாமியொன்றை ஏற்படுத்தலாமென இந்தோனேஷியாவின் வானிலை, காலநிலை, பூகோள பெளதிகவியல் முகவரகத்தின் தலைவர் விகோரிட்டா கர்னவதி தெரிவித்துள்ளார். 

எதிர்வரும் வாரங்களில் மோசமான காலநிலை, பல்வேறு ஆபத்துகள் எதிர்வுகூறப்பட்டுள்ளதாக கர்னவதி மேலும் கூறியுள்ளார். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .