2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

இன்னொரு பதவிக்காலத்தை எதிர்பார்க்கும் குட்டரெஸ்?

Shanmugan Murugavel   / 2021 ஜனவரி 11 , பி.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்பு நாடுகள் ஐந்துக்கும் தான் இரண்டாவது பதவிக்காலமொன்றில் தொடர விரும்புவதாக ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளதாக புளூம்பேர்க் நியூஸ் இணையத்தளம் நேற்று செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பாக அறிந்த இரண்டு இராஜதந்திரிகளை மேற்கோள்காட்டியே குறித்த செய்தியை புளூம்பேர்க் நியூஸ் வெளியிட்டுள்ளது.

இந்ந்நிலையில், ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் தலைவருக்கு குட்டரெஸ் விரைவில் இதை அறிவிப்பார் என தம்மை அடையாளங்காட்ட விரும்பாத இராஜதந்திரிகள் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .