2021 மார்ச் 06, சனிக்கிழமை

இரண்டாவது தடவையாக பதவிநீக்க குற்றச்சாட்டுக்குள்ளான ட்ரம்ப்

Shanmugan Murugavel   / 2021 ஜனவரி 14 , பி.ப. 02:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி வரலாற்றில், முதலாவது தடவையாக இரண்டாம் முறை பதவிநீக்க குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டவராக அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று மாறியுள்ளார்.

பிரதிநிதிகள் சபையில், ஜனநாயகக் கட்சியினரும் 10 குடியரசுக் கட்சியினரும் இணைந்து, காங்கிரஸில் கடந்த வாரம் இடம்பெற்ற வன்முறைக்காக ஜனாதிபதி ட்ரம்பைக் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

குற்றச்சாட்டுக்கு ஆதரவாக 232-197 என்ற வகையில் வாக்களிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், விரைவான பதவிநீக்க விசாரணைக்கான ஜனநாயகக் கட்சியினரின் கோரிக்கையை செனட்டின் குடியரசுக் கட்சி பெரும்பான்மைத் தலைவர் மிற்ச் மக்கொனல் மறுத்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .