2021 ஏப்ரல் 21, புதன்கிழமை

‘இஸ்ரேலிய ட்ரோன் மீது ஏவுகணை ஏவப்பட்டது’

Shanmugan Murugavel   / 2021 பெப்ரவரி 04 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தென் லெபனானுக்கு மேலே பறந்த இஸ்ரேலிய ட்ரோனொன்றுக்கு மேலே விமான எதிர்ப்பு ஏவுகணைகள் நேற்று ஏவப்பட்டதாகவும், ஆனால் இலக்கைத் தாக்கவில்லை என இஸ்ரேலிய இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ட்ரோனின் மீது லெபனானின் ஹிஸ்புல்லா பிரயோகம் மேற்கொண்டதாக இரண்டு லெபனானிய பாதுகாப்புத் தகவல் மூலங்கள் தெரிவித்துள்ளன. ட்ரோனை ஏவுகணை தாக்கவில்லையெனவும், பின்னர் ட்ரோன் இஸ்ரேலிய எல்லைக்குள் சென்றுவிட்டதாகவும் தகவல்மூலமொன்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில், வெடிப்புச் சத்தமொன்றைக் கேட்டதாக சம்பவத்தைக் கண்ணுற்றவர்கள் தெரிவித்ததுடன், ட்ரோன் வெடித்ததாக உள்ளூர் தொலைக்காட்சியான என்.பி.என் தெரிவித்திருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .