2020 ஓகஸ்ட் 15, சனிக்கிழமை

ஈராக் பிரதமரின் இராஜினாமாவை ஏற்ற நாடாளுமன்றம்

Editorial   / 2019 டிசெம்பர் 02 , பி.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈராக்கியப் பிரதமர் அடெல் அப்துல் மஹ்டியின் இராஜினாமாவை ஏற்பதற்கு அந்நாட்டு நாடாளுமன்றம் நேற்று முன்தினம் வாக்களித்துள்ளது.

வன்முறையைக் குறைப்பதற்காக பிரதமர் அடெல் அப்துல் மஹ்டி அரசாங்கத்துக்கான ஆதரவை வாபஸ் பெறுவது கருத்திற் கொள்ளுமாறு நாடாளுமன்றத்துக்கான ஈராக்கிய உயர் ஷியா மதகுருவான அயோத்துல்ல்லா அலி அல்-சிஸ்டானியின் அழைப்பையையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை பதவி விலக பிரதமர் அடெல் அப்துல் மஹ்டி தீர்மானித்திருந்தார்.

இந்நிலையில், புதிய பிரதமரொருவரைத் தெரிவு செய்யுமாறு ஜனாதிபதியை நாடாளுமன்றம் வினவுமென்று நாடாளுமன்றத்தின் ஊடக அலுவலகத்தின் அறிக்கையொன்று தெரிவித்துள்ளது.

இதேவேளை, பிரதமர் அடெல் அப்துல் மஹ்டி உள்ளடங்கலாக அவரின் அரசாங்கமானது, புதிய அரசாங்கம் தெரிவுசெய்யப்படும் வரை இடைக்கால அரசாங்கமாக இருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.

அரசமைப்பின்படி, நாடாளுமன்றத்திலுள்ள பெரிய குழுவுக்கு, அரசாங்கமொன்றை அமைப்பதற்கு புதிய பிரதமொருவரை தெரிவுசெய்யுமாறு ஜனாதிபதி பர்ஹம் சலிஹ் அழைப்பு விடுக்க வேண்டும்.

எனினும், நாடாளுமன்றத்தில் அங்கிகரிக்கப்பட்ட பெரிய குழுவொன்று காணப்படாத நிலையில் அரசியல் நெருக்கடி நீடிக்கும் எனக் கருதப்படுகிறது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--