Editorial / 2026 ஜனவரி 22 , பி.ப. 01:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

பீட்சாவுக்கு ஆசைப்பட்டு அமைச்சர் ஒருவர் முட்டாளாகி உள்ளார்.பாகிஸ்தான் பாதுகாப்பு துறை அமைச்சர் கவாஜா முகமது ஆசிப்பே இவ்வாறு முட்டாளாக்கப்பட்டுள்ளார்.
பிரபலமான ‛பீட்சா ஹட்' நிறுவனத்தின் கிளை என்று கூறி அவரை தொழிலதிபர்கள் ஏமாற்றி போலியான கிளையை திறக்க வைத்துள்ளனர். இதுதொடர்பான போட்டோ, வீடியோக்கள், ‛பீட்சா ஹட்' நிறுவனத்தின் விளக்கம் வெளியான நிலையில் பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகமது ஆசிப்பை பலரும் சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்து வருகின்றனர்..
பாகிஸ்தான் பாதுகாப்பு துறை அமைச்சர் கவாஜா முகமது ஆசிப்பை அங்குள்ள தொழிலதிபர்கள் முட்டாளாக்கி உள்ளனர்.
அதோடு ‛பீட்சா'வுக்கு ஆசைப்பட்டு சென்ற பாகிஸ்தான் பாதுகாப்பு துறை அமைச்சர் கவாஜா முகமது ஆசிப் ஏமாந்துள்ளார். அதாவது கிஸ்தானின் சியால்கோட் கண்டோன்மென்ட் பகுதியில் புதிதாக பீட்சா விற்பனை கடை திறக்கப்பட்டது.
இந்த கடை ‛பீட்சா ஹட்' என்ற பிரபல நிறுவனத்தின் கிளை என்று விளம்பரம் செய்யப்பட்டது. கடையின் முன்பகுதியில் ‛பீட்சா ஹட்' நிறுவனத்தின் பெயர் இடம்பெற்றிருந்தது. இந்த புதிய பீட்சா கடையை பாகிஸ்தானின் பாதுகாப்பு துறை அமைச்சர் கவாஜா முகமது ஆசிப் திறந்து வைத்தார். அமைச்சர் கவாஜா முகமது ஆசிப் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இதுதொடர்பான போட்டோ மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வெளியானது. இதனை ‛பீட்சா ஹட்' நிறுவனமும் கவனித்தது. அப்போது தான் ‛பீட்சா ஹட்' நிறுவனம் தனது புதிய கிளை எதையும் சியால்கோட் கண்டோன்மென்ட் பகுதியில் திறக்காததை அறிந்தது. மேலும் யாரோ ஒருவர் அவர்களின் பெயரில் போலியாக கிளையை உருவாக்கி பாகிஸ்தானின் பாதுகாப்பு துறை அமைச்சர் கவாஜா முகமது ஆசிப்பை வைத்து திறந்து விளம்பரம் தேடியதும் தெரியவந்தது.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago