2021 ஏப்ரல் 21, புதன்கிழமை

‘ஈ.எல்.என் தாக்குதல் குறித்து எச்சரித்த கியூபா’

Shanmugan Murugavel   / 2021 பெப்ரவரி 09 , பி.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கொலம்பியத் தலைநகர் பொகொட்டா மீது தாக்குதலொன்றுக்கு, அந்நாட்டின் தேசிய விடுதலை இராணுவத்தின் (ஈ.எல்.என்) போராளிகள் திட்டமிடலாமென கியூபா எச்சரித்துள்ளதாக, கொலம்பிய பாதுகாப்பமைச்சர் டியகோ மொலானோ நேற்று தெரிவித்துள்ளார்.

சமூகவலைத்தளத்தில் காணொளியொன்றில், ஈ.எல்.என்-இன் கிழக்கு முனையால் பயங்கரவாதத் தாக்குதலொன்று திட்டமிடப்படுவதான தொடர்பாடலொன்றை கியூபத் தூதுவர் ஜொஸே லூயிஸ் பொன்ஸ் நேற்று அனுப்பியதாக மொலானோ கூறியுள்ளார்.

இந்நிலையில், அனைத்து கொலம்பிய நகரங்களிலும், பிராந்திய ரீதியிலும் அனைத்து கொலம்பியர்களையும் பாதுகாப்பதற்காக தமது ஆயுதப் படைகளும், பொலிஸாரும் தரையிறக்கப்பட்டுள்ளதாக மொலானோ மேலும் தெரிவித்துள்ளார்.

பொன்ஸின் கடிதத்தில், எதிர்வரும் நாள்களில் தாக்குதல் திட்டமிடப்பட்டுள்ளதாக பொன்ஸ் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .