2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

ஏ.ரி.எம்.இயந்திரத்தை கண்டுபிடித்தவர் மரணம்

Super User   / 2010 மே 20 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ரி.எம். இயந்திரத்தை கண்டுபிடித்த ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த ஷெப்பர்ட் பெரோன் (வயது 84), உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று உயிரிழந்தார். வங்கியில் இருக்கும் சொந்த பணத்தை எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் எடுத்துக்கொள்ளும் வசதியை அளித்துள்ள ஏ.ரி.எம்.இயந்திரங்கள் இன்று மூலை முடுக்கெல்லாம் முளைத்து நவீன வாழ்க்கையின் அடையாளமாகத் திகழ்கின்றன.

இந்த ஏ.ரி.எம் இயந்திரத்தை ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த ஜோன் ஷெப்பர்ட் பெரோன் என்பவரே முதன் முதலில் உருவாக்கினார். கடந்த 1967ஆம் ஆண்டு இவர் உருவாக்கிய ஏ.ரி.எம்.இயந்திரம், வடக்கு பிரிட்டிஷிலுள்ள பார்க்லேஸ் வங்கியில் வைக்கப்பட்டது.

இந்த ஏ.ரி.எம் இயந்திரமானது பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால் தற்போது உள்ளதிப்போல் ஏ.ரி.எம்.அட்டைகள் உருவாக்கப்படவில்லை. அதற்கு பதிலாக விசேட காசோலைகள் பயன்படுத்தப்பட்டன. காசோலைகளை இயந்திரத்தில் வைப்பதற்கு முன்பாக அடையாள எண்ணை தெரிவிக்க வேண்டும். முதலில் ஷெப்பர்டு 10 இலக்கம் கொண்ட அடையாள எண்ணை உருவாக்கினார். ஆனால் அவற்றை நினைவில் கொள்ள முடியவில்லை என்று மனைவி புகார் கூறியதையடுத்து 4இலக்கம் கொண்ட எண்ணாக அதனை மாற்றினார்.இன்றுவரை அதுவே தொடர்கிறது.

இந்த கண்டுபிடிப்புக்கு சொந்தக்காரரான ஷெப்பர்டு தனது 84ஆவது வயதில் இன்று காலமானார். சிறிது காலம் அவர் நோய்வாய்ப்பட்டிருந்த நிலையிலேயே அவர் உயிரிழந்தார் என்று அந்நாட்டு தகவல்கள் தெரிவித்தன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--