Shanmugan Murugavel / 2021 மார்ச் 04 , பி.ப. 02:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய அமெரிக்கப் படைகளைக் கொண்டுள்ள ஈராக்கின் ஐன் அல்-அசாட் விமானத் தளத்துக்கெதிராக புதிய றொக்கெட் தாக்குதலொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த தாக்குதலானது ஈரானிய ஆதரவு ஆயுதக்குழு தாக்குதலொன்று போலுள்ளது என ஐ. அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய அமெரிக்கப் படைவீரர்கள் காயமடைந்ததாக எதுவித அறிக்கைகளும் இல்லாதபோதும், றொக்கெட்டுகளிலிருந்து பாதுகாப்புத் தேடும்போது அமெரிக்க சிவில் ஒப்பந்தக்காரரொருவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக, ஐ. அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தளத்தில் 10 றொக்கெட்டுகள் தரையிறங்கியதாக ஈராக்கிய அதிகாரிகள் தெரிவித்த நிலையில், தளத்துக்கு கிழக்காகவுள்ள பல இடங்களிலிருந்து றொக்கெட்டுகள் ஏவப்பட்டது போலத் தோன்றுவதாக பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தளத்திலிருந்து எட்டுக் கிலோ மீற்றர் தொலைவிலுள்ள இடமொன்றிலிருந்து தாக்குதல் இடம்பெற்றதாக ஈராக்கிய நடவடிக்கைகள் கட்டளை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளதுடன், பக்தாதி நகரத்திலிருந்து ஏவப்பட்டதாக இன்னொரு பாதுகாப்புத் தகவல்மூலமொன்று தெரிவித்துள்ளது.
8 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
2 hours ago
3 hours ago