2020 ஜூலை 07, செவ்வாய்க்கிழமை

கத்திக் குத்தில் மூவர் பலி

Editorial   / 2020 ஜூன் 22 , மு.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென் பிரித்தானிய நகரான றீடிங்கில் நேற்று முன்தினம் நபரொருவர் மேற்கொண்ட கத்திக்குத்தியில் மூவர் கொல்லப்பட்டதுடன், மூவர் மோசமாகக் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த சம்பவத்தை தற்போது பயங்கரவாதமாக நோக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கை நேரப்படி நேற்று முன்தினமிரவு 11.30 மணியளவில் நபரொருவர் கத்திக்குத்தை மேற்கொண்டதாக சம்பவத்தை கண்ணுற்றவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கொலைச் சந்தேகத்தில் றீடிங்கைச் சேர்ந்த 25 வயதான நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளதுடன், தாங்கள் வேறெந்த சந்தேகநபர்களையும் தேடவில்லை எனக் கூறியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .