2020 ஜூன் 04, வியாழக்கிழமை

கமலுக்கு எதிரான வழக்கை விசாரிக்க மறுத்தது உயர்நீதிமன்றம்

Editorial   / 2019 மே 16 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மக்கள் நீதி மய்யத்தின் கட்சித் தலைவர் கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பாரதிய ஜனதாக் கட்சியின் (பா.ஜ.க) நிர்வாகி தாக்கல் செய்த மனுவை, டெல்லி உயர்நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்க மறுத்துள்ளது. மாறாக, இது குறித்து, தேர்தல் ஆணையகமே முடிவெடுக்கவேண்டும் என, அறிவுறுத்தியுள்ளது.

இந்த பொதுமநல மனு, நேற்று (15) விசாரணைக்கு வந்துள்ளது. இதன்போதே, மனுதாரர், இது குறித்து, தேர்தல் ஆணையகத்திடம் முறையிடலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்றும் அவர் பெயர் நாதுராம் கோட்சே என்றும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறிய கருத்து, தற்போது இந்தியா முழுவதும் சர்ச்சையைக் கிளப்பி வருகின்றது. இந்தக் கருத்துக்கு, பா.ஜ.க தேசியச் செயலாளர் எச்.ராஜா, தமிழக பா.ஜ.க தலைவர் தமிழசை சவுந்தரராஜன் உள்ளிட்ட பலரும் கண்டனங்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X