2021 பெப்ரவரி 27, சனிக்கிழமை

சக்திவாய்ந்த நிலநடுக்கம்; கூட்டம் கூட்டமாக வெளியேறும் மக்கள்!

J.A. George   / 2021 ஜனவரி 15 , பி.ப. 01:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தோனேசியாவில் உள்ள சுலவெசி தீவில் இன்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் குறைந்தது ஏழு பேராவது உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பதற்றத்தில் வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

சுலவெசி தீவில் 6.2 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் இன்று தாக்கியுள்ளது. 

இந்த நிலநடுக்கம் மெஜீன் நகரில் இருந்து வடகிழக்கு திசையில் 6 கிலோமீட்டர் தொலைவில், 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .