2020 ஓகஸ்ட் 07, வெள்ளிக்கிழமை

சமோவா சின்னம்மை பரவல்: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 53ஆக அதிகரித்தது

Editorial   / 2019 டிசெம்பர் 02 , பி.ப. 07:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

சமோவாவில் சின்னம்மை பரவலால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 53ஆக இன்று அதிகரித்துள்ளது. அந்தவகையில், பாடசாலைகளை மூடியுள்ள சமோவா, போக்குவரத்தையும் கட்டுப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், அதிகம் தொற்றக்கூடிய தன்மையைக் கொண்ட சின்னம்மை சமோவாவில் பரவ ஆரம்பித்தபோது உலக சுகாதார ஸ்தாபனத்தின் கருத்துப்படி 31 சதவீதமானோரே தடுப்புமருந்தைப் பெற்றிருந்தனர்.

அந்தவகையிலேயே, இரண்டு வாரங்களில் 10 மடங்குக்கு மேலாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சமோவா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஏறத்தாழ 200,000 பேரைக் கொண்ட சமோவாவில் தற்போது 3,700க்கும் மேற்பட்டோர் சின்னம்மை தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில், உயிரிழ்ந்தர் 53 பேரில் 50 பேர், 15 வயதுக்கும் குறைந்த சிறுவர்கள் எனத் தெரிவித்த சமோவா பிரதமர் அலுவலகத்தின் ஊடகச் செயலாளர் நனாய் லவெய்டிகா துய்லெடுஃபுகா, 23 குழந்தைகள், ஒரு வயதுக்கும் குறைந்தவை எனக் கூறியுள்ளதுடன், கடந்த 24 மணித்தியாலங்களில் சின்னம்மையால் தொற்றுக்கு உள்ளாகிய மேலும் 198 பேர் சுகாதார அமைச்சால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

சின்னம்மையானது செல்வந்த நாடுகளான ஜேர்மனி, ஐக்கிய அமெரிக்கா போன்றவற்றிலும் உலகளாவிய ரீதியாக அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. கொள்கை அல்லது மதக் காரணங்களுக்காக அல்லது தடுப்புமருந்து மன இறுக்கத்தை அளிக்கும் என்ற வைத்தியர்களின் அச்சத்தால் தடுப்புமருந்தை பெற்றோர்கள் தவிக்கின்றனர் எனக் கூறப்படுகிறது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--