2021 மார்ச் 03, புதன்கிழமை

சீனாவில் 8 மாதங்களில் முதன்முறையாக ஒருவர் மரணம்

J.A. George   / 2021 ஜனவரி 14 , பி.ப. 12:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவில், எட்டு மாதங்களில் முதன்முறையாக ஒருவர், கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தார்.

அவர், ஹெபெய் (Hebei)மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால் அந்த மாநிலத்தின் பல நகரங்கள் தற்போது முடக்கப்பட்டுள்ளன.

சீனாவில், இன்று புதிதாக 138 பேரிடம் வைரஸ்  தொற்று அடையாளம் காணப்பட்டது.

அவர்களில் 124 பேர், உள்ளூரில் வைரஸ் தொற்றுக்கு ஆளானவர்கள் என்றும், பாதிக்கப்பட்டவர்களில் 81 பேர், ஹெபெய் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகின்றது.

அத்துடன், 43 பேர், வடக்கிழக்கு மாநிலமான ஹெய்லொங்ஜியாங்கைச் (Heilongjiang) சேர்ந்தவர்கள்.

இந்த நிலையில், சீனாவில் அறிகுறிகளின்றி 78 பேர் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .