2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

செவ்வாயை அடைந்த அமீரகத்தின் விண்கலம்

Shanmugan Murugavel   / 2021 பெப்ரவரி 10 , மு.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஐக்கிய அரபு அமீரகத்தின் செவ்வாய்க்கான விண்கலமான ஹோப்பானது செவ்வாயை அடைந்ததுடன், சுற்றுவட்டப்பாதைக்குள் நேற்று நுழைந்துள்ளது.

ஏழு மாதங்களாக 494 மில்லியன் கிலோ மீற்றர் பயணத்தின் பின்னரே இவ்வாறு சுற்றுவட்டப்பாதையை ஹோப் அடைந்துள்ளது.

இந்நிலையில், செவ்வாயின் வளிமண்டலம், காலநிலை குறித்த தரவுகளை அனுப்ப ஆரம்பித்துள்ளது.

அந்தவகையில், செவ்வாயை அடைந்த ஐந்தாவது நாடு ஐ.அ. அமீரகமாகும்.

குறித்த விண்கலமானது ஜப்பானிய விண்வெளி நிலையத்திலிருந்து ஏவப்பட்டிருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .