2025 டிசெம்பர் 13, சனிக்கிழமை

ஜனாதிபதியின் கவனத்துக்கு

Freelancer   / 2025 டிசெம்பர் 13 , மு.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

அண்மையில் இடம்பெற்ற இயற்கை பேரழிவையடுத்து, உரிய நிவாரணங்களை வழங்குமாறு, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவுறுருத்தல் வழங்கியிருந்தார்.

எனினும், பாதிக்கப்பட்ட பல பிரதேசங்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்பட்ட எந்தவித நிவாரணங்களை கிடைக்கவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

அத்துடன், தனிநபர்களால், குழுக்களால் அல்லது அமைப்புக்களால் வழங்கப்படும் நிவாரணங்கள் பாதிக்கப்பட்ட தூர பிரதேச மக்களை இதுவரை சென்றடையவில்லை என குற்றஞ்சாட்டுகின்றனர். 

இந்நிலையில், வீடுகளை சுத்தம் செய்ய அரசாங்கத்தால் வழங்கப்படும் 25 ஆயிரம் ரூபா நிதியை பெறுவதற்கு பாதிக்கப்பட்ட மக்கள் கிராம சேவகர்களை சென்று சந்தித்தபோது, அங்கு பதிவு இல்லை என்ற குறைபாடை வைத்து, அந்த 25 ஆயிரம் ரூபா நிதியை வழங்க சில கிராம சேவகர்கள் மறுக்கின்றனர் என்றும் குற்றஞ்சாட்டப்படுகின்றது .

இந்த நிலையில், பாதிக்கப்பட்டு வாடகை வீடுகளில் வசிக்கின்ற பலரும் கடந்த 3 தேர்தல்களிலும் வாக்களித்துள்ளனர் என்பதும் தெரியவருகின்றது. 

இதேவேளை, பெருந்தோட்ட பிரதேசங்களில், தோட்டங்களில் வாழ்கின்ற மக்களுக்கும் கிராம் சேவகர்கள் நிவாரணம் வழங்காமல் இழுத்தடிப்பதாக அறிய முடிகின்றது. அவர்களால் வழங்கப்படும் விண்ணப்ப படிவங்களில் கையொப்பங்களை பெற்றுக்கொள்வதற்கு கூட பல கிராம சேவகர்கள் மறுக்கின்றனர் என அறியமுடிகின்றது. 

ஆகவே, இதுதொடர்பில் ஜனாதிபதி உள்ளிட்ட இந்த நிவாரணத்துக்கு பொறுப்பானவர்கள் கவனம் செலுத்தவேண்டுமென மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X