2025 டிசெம்பர் 13, சனிக்கிழமை

தாழமுக்கங்கள் உருவாகும்

Freelancer   / 2025 டிசெம்பர் 13 , மு.ப. 08:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடகிழக்கு பருவப்பெயர்ச்சி காற்று வலுவடைந்துள்ள நிலையில், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்கள், தாழமுக்கங்கள் உருவாகலாம் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. 
 
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் சம்பத் கொட்டுவேகொட இதனைத் தெரிவித்துள்ளார். 

கடந்த 30 ஆண்டுகளில் வட,கிழக்கு பருவப்பெயர்ச்சியில் ஏற்பட்ட மாற்றம் குறித்த தரவுகளை ஆய்வு செய்து சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் ஊடாக இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். 
 
அதன்படி, வட மாகாணத்தில் சாதாரண மழைவீழ்ச்சியை விட அதிக மழைவீழ்ச்சியை எதிர்பார்க்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X