Shanmugan Murugavel / 2021 ஜனவரி 19 , பி.ப. 10:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜேர்மனியின் தென் மாநிலமான பவரியாவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய கொவிட்-19 மாறி குறித்து அந்நாடு சுகாதார அதிகாரிகள் விசாரணை செய்கின்றனர்.
கர்மிஷ்-பார்டென்கிர்ஷென் நகரத்திலுள்ள வைத்தியசாலையொன்றில், 35 பேரில் புதிய மாறி நேற்று முன்தினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வைத்தியசாலையில் 73 நோயாளர்களும், பணியாளர்களும் தொற்றுக்குள்ளானதைத் தொடர்ந்தே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த மாறியானது பிரித்தானியாவிலும், தென்னாபிரிக்காவிலும் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட மாறியை விட வித்தியாசமானது என வைத்தியசாலை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில், புதிய மாறியானது மேலும் பயங்கரமானதா அல்லது தொற்றக்கூடியதா என இன்னும் தெரியவில்லை என பிரதி மருத்துவப் பணிப்பாளர் கிளெமென்ஸ் ஸ்டொக்கிளவுஸ்னர் கூறியுள்ளார்.
10 minute ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
1 hours ago
3 hours ago