2021 மார்ச் 01, திங்கட்கிழமை

ட்ரம்ப்புடன் இரகசியங்களை பகிருவதில் காத்திருக்கவுள்ள பைடன்

Shanmugan Murugavel   / 2021 ஜனவரி 18 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பதவி விலகியதையடுத்து இரகசியமான தகவலை அவருடன் பகிர்ந்து கொள்வதா என புலனாய்வு ஆலோசகர்களின் பரிந்துரையொன்றுக்காக அந்நாட்டு ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள ஜோ பைடன் காத்திருப்பார் என அவரின் வெள்ளை மாளிகை பணியாட்தொகுதித் தலைவராக வரவுள்ள றொன் கிளைன் நேற்று தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி பதவியை விட்டு ட்ரம்ப் விலகிய பின்னர் இவ்வாறான தகவல்களை அவருடன் பகிர்வதற்கெதிராக வாதாடி கட்டுரையொன்றை, தேசிய புலனாய்வின் முன்னாள் முதன்மை பிரதிப் பணிப்பாளர் சுயே கொர்டன் எழுதியதைத் தொடர்ந்தே கிளைன் குறித்த கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .