2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

தென்கொரியா வெள்ளம், நிலச்சரிவுகளில் 30 பேர் இறப்பு

Editorial   / 2020 ஓகஸ்ட் 09 , பி.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தென்கொரியாவில் 46 நாள்கள் கடும் மழையைத் தொடர்ந்து குறைந்தது 30 பேர் இறந்ததுடன், 12 பேரை இன்னும் காணவில்லை.

அந்தவகையில், தென்கொரியாவில் ஏழு ஆண்டுகளில் மிகப்பெரிய மழைப்பருவகாலத்தால் மேலும் மழை, நிலச்சரிவு, வெளியேற்றங்களை நேற்று ஏற்படுத்தியுள்ளது.

தென்கொரிய யொன்ஹப் செய்தி முகவரகத்தின்படி இன்று வரையில் 6,000 வரையானோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். அந்தவகையில், கொரிய வளைகுடாவின் தென்பகுதியை மழை பயங்கரமாகத் தாக்கி வருகிறது.

இதேவேளை, மத்திய இடர் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கான தலைமையத்தை மேற்கோள்காட்டியுள்ள யொன்ஹப் குறைந்தது எட்டுப் பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தென்கொரியத் தலைநகர் சியோலுக்கு 85 கிலோமீற்றர் கிழக்காக சுன்செயோனிலுள்ள உயம் குளத்தில் மூழ்கிய மூன்று கப்பல்களில் மூன்று பேர் இறந்ததுடன் இன்று மூவரைக் காணவில்லை.

யொன்ஹப்பின் தகவல்படி 11 மாகாணங்களைச் சேர்ந்த 5,900க்கும் அதிகமானோர் அவர்களின் வீட்டை விட்டு வெளியேறியதுடன், 4,600 பேரளவில் தற்காலிக வதிவிடங்களில் எச்சரிக்கையையடுத்து தங்கியுள்ளனர்.

இந்நிலையில், 9,3000 ஹெக்டேயர் பண்ணை நிலம் அழிவடைந்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--