Editorial / 2018 செப்டெம்பர் 12 , மு.ப. 03:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிரியாவின் வடமேற்கு மாகாணமான இட்லிப்பில், சிரிய அரசாங்கத்தால் இராணுவ நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டால், துருக்கிக்கும் மனிதாபிமான, பாதுகாப்பு நெருக்கடிகள் ஏற்படுமென, துருக்கி ஜனாதிபதி றிசெப் தய்யீப் ஏர்டோவான் எச்சரித்துள்ளார்.
ஐக்கிய அமெரிக்காவின் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் பத்திரிகையில், கட்டுரையொன்றிலேயே, ஜனாதிபதி ஏர்டோவான், இவ்வாறு நேற்று (11) குறிப்பிட்டுள்ளார்.
இட்லிப் தொடர்பான பிரச்சினையில், ஒட்டுமொத்த உலகமும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரிய அவர், இல்லாவிடின், இட்லிப் பிரச்சினையின் விளைவுகளை, ஒட்டுமொத்த உலகமும் எதிர்கொள்ளுமெனக் குறிப்பிட்டார்.
“இட்லிப் மீதான தாக்குதல் இடம்பெறவுள்ள நிலையில், சர்வதேச சமூகத்தைச் சேர்ந்த அனைத்து அங்கத்தவர்களும், தமது பொறுப்புக் குறித்துப் புரிந்துகொள்ள வேண்டும். நடவடிக்கையேதும் எடுக்காமலிருப்பதன் விளைவுகள் மிக அதிகம்” என, அவர் குறிப்பிட்டார்.
இட்லிப் மீதான தாக்குதல்கள், சிரியாவில் பாதுகாப்பு நெருக்கடியை ஏற்படுத்தும் என்பது ஒருபக்கமிருக்க, இட்லிப்பிலுள்ள எதிரணிப் போராளிகளுக்கான ஆதரவை, துருக்கி வழங்குகிறது. அதைவிட முக்கியமாக, இட்லிப்புக்குள், இராணுவத்தினரைக் கொண்டுள்ள துருக்கி, அங்கு கண்காணிப்புச் சாவடிகளையும் அமைத்துள்ளது. எனவே தான், இட்லிப் மீதான தாக்குதல் தொடர்பில், தனது முழுமையான கவனத்தை, துருக்கி வெளிப்படுத்தியுள்ளது.
32 minute ago
39 minute ago
2 hours ago
05 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
39 minute ago
2 hours ago
05 Nov 2025