Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Shanmugan Murugavel / 2016 ஜூலை 17 , பி.ப. 03:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரான்ஸின் நீஸில் கடந்த வியாழக்கிழமை (14) இடம்பெற்ற தாக்குதலில் 84 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு உதவும் பொருட்டு, நெருக்கடிகால நிலைப் பொலிஸார் 12,000 பேரை பிரான்ஸ் அழைத்துள்ளது.
இதேவேளை, பிரான்ஸின் எல்லைகளைப் பாதுகாப்பதற்கு உதவும் பொருட்டு, இயலுமான அனைத்து பிரெஞ் நாட்டுப்பற்றாளர்களையும் நெருக்கடி நிலை படையினராக கைச்சாத்திடுமாறு உள்நாட்டு அமைச்சர் பேர்னார்ட் கஸூநோவே கோரியுள்ளார்.
கடல் முகத்தை நோக்கிய சனத்திரளினுள், மொஹமெட் லவேஷ் பௌலெல் லொறியை ஓட்டிச் சென்ற நிலையில், பின்னர் அவரை பொலிஸார் சுட்டுக் கொன்றிருந்தனர். இந்நிலையில், தமது பின்தொடருநர்களில் ஒருவரே தாக்குதலை நடத்தியதாக ஐ.எஸ்.ஐ.எஸ் உரிமை கோரியுள்ளது.
இந்நிலையில், லவேஷ் பௌலெல்லின் பிரிந்திருக்கின்ற மனைவி உட்பட அவருடன் தொடர்புடைய ஐந்து பேர், பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் அரச வழக்குத் தொடருநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, கடந்த சனிக்கிழமையிலிருந்து (16) நாளை திங்கட்கிழமை (18) வரை மூன்று தினங்களுக்கு துக்கதினம் அனுஷ்டிக்கப்படுகின்ற நிலையில், ஏற்கெனவே, பொலிஸாரும் இராணுவத்தினருமாக 120,000 பேர் நாடு முழுவதும் களமிறக்கப்பட்டுள்ளனர்.
டெஸ் லொங்ளே கடல்முகத்தில் குறித்த தாக்குதல் இடம்பெறும்போது 30,000 பேரளவில் அங்கிருந்த நிலையில், 10 சிறுவர்கள் உட்பட 84 பேர் கொல்லப்பட்ட நிலையில், மொத்தமாக 303 பேர் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையில், 30 சிறுவர்கள் உட்பட 121 பேர் தற்போதும் வைத்தியசாலையில் உள்ளதோடு, ஐந்து சிறுவர்கள் உள்ளடங்கலாக 26 பேர் தீவிர சிகிச்சையின் கீழ் காணப்படுகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
21 minute ago
54 minute ago
1 hours ago