Editorial / 2020 ஜனவரி 16 , பி.ப. 07:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

அதிகம் அறியப்பட்டிருக்காத மத்திய வரிச் சேவையின் தலைவர் மிகைல் மிஷுஸ்டின்னை புதிய பிரதமராக நேற்றுப் பெயரிட்டுள்ள ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், அரசியலைப்பு மாற்றமொன்றையும் முன்மொழிந்துள்ளார்.
இந்நிலையில், நாடாளுமன்றத்தின் வகிபாகத்தைப் பலப்படுத்தும் அரசமைப்புச் சீர்திருத்தங்களை தனது வருடாந்த தேசத்துக்கான உரையில் ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து, தனது அரசாங்கம் பதவி விலகுவதாக பிரதமர் டிமித்ரி மெட்வெடெவ் அறிவித்திருந்தார்.
இச்சந்தர்ப்பத்திலேயே புதிய அரசாங்கமொன்றை அமைப்பதற்காக, தொழில்நுட்பவாதியாக நோக்கப்படுகின்ற மிகைல் மிஷுஸ்டின்னை பிரதமராக ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவுசெய்திருந்தார்.
இந்நிலையில், தேசத்துக்கான தனது வருடாந்த உரையில், பிரதமர், சிரேஷ்ட அமைச்சரவை அமைச்சர்களை தற்போதைய அரசமைப்பில் உள்ளதன்படி ஜனாதிபதி தேர்ந்தெடுப்பதற்கு பதிலாக நாடாளுமன்றம் தெரிவு செய்வது உள்ளடங்கலாக மேலும் அதிகாரங்கள் நாடாளுமன்றத்துக்கு வழங்கப்படுவதை விரும்புவதாக ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் கூறியிருந்தார்.
இதேவேளை, தான் தலைவராக இருக்கும் பாதுகாப்புச் சபையின் உப தலைவராக டிமிட்ரி மெட்வெடெவ் பொறுப்பெடுப்பார் என ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் இலக்கானது தற்போதும் வாழ்நாள் முழுவதும் தனித்த தலைவராக இருபதாகவே இருக்கும் என நம்புவதாகத் தெரிவித்துள்ள ரஷ்ய அரசாங்கத்தின் முன்னணி விமர்சகரான அலெக்ஸி நேவன்லி, அரசமைப்பு மாற்றங்கள் மீதான எந்தவொரு வாக்கெடுப்பும் மோசடியாகவே இருக்கும் என தான் எதிர்பார்ப்பதாகக் கூறியுள்ளார்.
7 hours ago
9 hours ago
28 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
28 Oct 2025