2020 மே 28, வியாழக்கிழமை

பொதுவெளி பிரசன்னங்களைக் குறைத்துக் கொண்ட கிம்

Editorial   / 2020 மே 22 , பி.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வடகொரியத் தலைவர் கிம் ஜொங் உன், வழமைக்கு மாறாக கடந்த இரண்டு மாதங்களில் சிறிய எண்ணிக்கையான பொதுவெளி பிரசன்னத்தைக் கொண்டிருப்பதுடன், பொதுநிகழ்வொன்றில் அவரின் பிரசன்னத்தை அரச ஊடகம் வெளியிடாத மூன்று வாரங்களை மீண்டும் கடந்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எந்தவொரு கொவிட்-19 தொற்றாளர்களும் தம்மிடையே இல்லை என வடகொரியா தெரிவித்துள்ளபோதும் கொவிட்-19-க்கு எதிரான நடவடிக்கைகளை அமல்படுத்தியுள்ளதுடன், தனது பேரனின் பிறந்தநாளை தலைவர் கிம் ஜொங் உன் தவறவிட்டதைத் தொடர்ந்து அவரது உடல்நிலை தொடர்பாக தீவிர சந்தேகங்கள் நிலவிய நிலையிலேயே அவரது பொதுவெளிப் பிரசன்னங்கள் குறைந்துள்ளன.

கடந்த மாதமும், இம்மாதமும் பொதுவெளியில் நான்கு தடவைகளே பொதுவெளியில் தலைவர் கிம் தோன்றிய நிலையில், கடந்தாண்டு இதே காலத்தில் 27 தடவைகள் பொதுவெளியில் தோன்றியுள்ளார். தவிர, 2011ஆம் ஆண்டு அதிகாரத்துக்கு வந்த பின்னர் குறித்த மாதங்களில் குறைந்தளவு பிரசன்னமாக 2017ஆம் ஆண்டு 21 தடவைகள் பொதுவெளியில் தலைவர் கிம் பிரசன்னமாகியிருந்ததாக கொரிய ஆபத்து குழுவின் பிரதம நிறைவேற்றதிகாரி சாட் ஓ கரோல் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X