2024 மே 11, சனிக்கிழமை

புனிதப் பயணிகளுக்கான விசா தற்காலிகமாக இரத்து

Editorial   / 2020 பெப்ரவரி 27 , பி.ப. 01:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

சவுதி அரேபிய அரசாங்கம், மக்காவுக்குப் புனிதப் பயணம் செல்வதற்கான விசாக்களை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.

மத்திய கிழக்கு முழுவதும் COVID-19 வைரஸ் பரவி வருவதால், யாத்திரிகர்களுக்கான விசாக்களை நிறுத்தி வைக்க முடிவெடுக்கப்பட்டதாக சவுதி அரேபிய வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.

உம்ராவுக்காக சவுதி அரேபியா செல்வதற்கும், புனித மதீனா செல்வதற்குமான அனுமதி தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.

ஓர் ஆண்டில் ஒவ்வொரு மாதமும், உம்ரா செய்வதற்காக உலக நாடுகளில் உள்ள பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் சவுதி அரேபியாவின் மக்கா, மதீனா நகரங்களுக்குச் செல்வது வழக்கம்.

COVID-19 வைரஸ் அச்சுறுத்தல் உள்ள நாடுகளிலிருந்து வரும் வெளிநாட்டினருக்கு விசாக்கள் வழங்கபடமாட்டா என்று சவுதி அரேபிய வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டது.

இந்த தகவலை அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

குவைத், பஹ்ரேன் ஆகிய வளைகுடா நாடுகளில் உள்ளவர்களும் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .