2020 ஜூலை 15, புதன்கிழமை

பயங்கரவாதத் தாக்குதலால் 53 இராணுவத்தினர் பலி

Editorial   / 2019 நவம்பர் 02 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாலி நாட்டில் உள்ள இராணுவச் சோதனைச் சாவடியில் மேற்கொள்ளப்பட்ட பயங்கவரவாதத் தாக்குதலால் 53 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

சமீப காலமாகவே மாலி நாட்டில் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளன. இதனால் இராணுவத்தினரும் பொலிஸாரும் தொடர்ந்து பாதுகாப்புப் பணிகளில் ஈடுப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அந்நாட்டின் எல்லையில்  உள்ள மெனாகா பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் நேற்று(01) பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 53 இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

பயங்கரவாதிகளின் இந்த தாக்குதல் கண்டனத்திற்கு உரியதெனத் தெரிவித்துள்ள அந்நாட்டின் தகவல் தொடர்பு அமைச்சர் யயா சங்கரே, எதிர்பாராத விதமாக நடந்த இந்த கொடூர தாக்குதலில் 53 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். பொதுமக்களில் ஒருவரும் உயிரிழந்தார். 10 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X