Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Shanmugan Murugavel / 2020 நவம்பர் 20 , பி.ப. 06:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொவிட்-19 தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்பைப் பேணியவர்களைத் தேடுபவர்களுக்கு கொவிட்-19 தொற்றுக்குள்ளான ஒருவரால் சொல்லப்பட்ட பொய்யாலேயே தென் அவுஸ்திரேலியாவில் ஆறு நாள்கள் கொவிட்-19 முடக்கம் ஏற்பட்டுள்ளது.
பீஸா விடுதியொன்றில் கொவிட்-19 பரவலுடன் தொடர்புடைய நபரொருவர் அங்கு பீஸாவை மாத்திரம் வாங்கியதாக தொடர்பைப் பேணியவர்களைத் தேடுபவர்களிடம் தெரிவித்ததாக அடிலெய்ட்டில் நடைபெற்ற செய்தியாளர் மாநாடொன்றில் தென் அவுஸ்திரேலிய மாநிலப் பிரதமர் ஸ்டீவன் மார்ஷல் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், குறுகிய நேரத்தில் இந்நபர் தொற்றுக்குள்ளானதாக அதிகாரிகள் கருத்திற் கொண்ட நிலையில் இத்தொற்றானது அதிக தொற்றுக்குரியது என நம்பியுள்ளனர்.
ஆனால், உண்மையாக குறித்த நபர் விடுதியில் கொவிட்-19 தொற்றுக்குள்ளான இன்னொருவருடன் பல தடவைகள் பணிபுரிந்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .