2021 மார்ச் 08, திங்கட்கிழமை

பிரதமர் மொறிஸன் மீது அதிகரிக்கும் அழுத்தம்

Shanmugan Murugavel   / 2021 பெப்ரவரி 22 , பி.ப. 02:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அவுஸ்திரேலியப் பிரதமர் ஸ்கொட் மொறிஸன் மீதான அழுத்தம் அதிகரித்து வருகின்றது.

பெயரிடப்படாத, பிரதமர் மொறிஸனின் லிபரல் கட்சியின் முன்னாள் பணியாளரொருவரால் 2016ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29ஆம் திகதி இரவும், ஜூன் 30ஆம் திகதி காலையும் வன்புணரப்பட்டதாக பெண்ணொருவர் தெரிவித்ததாக த அவுஸ்திரேலியன் பத்திரிகை பிரசுரித்தமையைத் தொடர்ந்தே, பிரதமர் மொறிஸன் மீதான அழுத்தம் அதிகரித்துள்ளது.

குறித்த நபரால் 2019, கடந்தாண்டு தாம் வன்புணரப்பட்டதாக லிபரல் கட்சியின் இரண்டு பெண் பணியாளர்கள் கடந்த வாரம் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

இதுதவிர, பெண்களை நோக்கி முறையற்ற நடத்தையை காண்பித்ததாக குற்றச்சாட்டுக்களை லிபரல் கட்சி எதிர்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .