2021 மார்ச் 08, திங்கட்கிழமை

பஸ்ஸில் கடத்தப்பட்ட 53 பேரை விடுவித்த கடத்தல்காரர்கள்

Shanmugan Murugavel   / 2021 பெப்ரவரி 22 , பி.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நைஜீரியாவிலுள்ள பஸ்ஸொன்றிலிருந்து கடத்தப்பட்ட சிறுவர்கள், பெண்கள் உள்ளடங்கலாக 53 பேரை கடத்தல்காரர்கள் விடுவித்துள்ளனர்.

எனினும், பிறிதொரு தாக்குதலில் பாடசாலையிலிருந்து கடத்தப்பட்டோர் இன்னும் காணாமலேயுள்ளனர்.

நைகர் மாநிலத்தின் குண்டு கிராமத்தில், மாநில பஸ்ஸொன்றில் பயணித்த ஒன்பது சிறுவர்களும், 20 பெண்களும் உள்ளடங்கலாக 53 பேரை கடந்த வாரம் குழுவொன்று கடத்தியிருந்தது.

இந்நிலையில், பணயத்தொகை செலுத்தப்பட்டதா என்பது தெளிவில்லாத நிலையில், தாம் எதுவும் செலுத்தமாட்டோன் என மாநில பிரதிநிதிகள் முன்னர் தெரிவித்திருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .