2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

பிரேஸிலில் கடும் மழை; வெள்ளப்பெருக்கில் காணாமல் போனவர்களை தேடும் பணி

Super User   / 2010 ஜூன் 24 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரேஸிலின் வட கிழக்குப் பகுதியில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் கடும் மழை காரணமாக ஏற்பட்டிருக்கும் வெள்ளப்பெருக்கால்  காணாமல் போனவர்களை தேடும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

மேற்படி மழை வெள்ளத்தால்  600 பேர் வரையில் காணாமல் போயிருப்பதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், வெள்ளப்பெருக்கில் அகப்பட்டு 44 பேர் உயிரிழந்திருப்பதுடன், சுமார் 120,000 பொதுமக்கள் தமது வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியிருக்கும் நிலையில் பாடசாலைகள், தேவாலயங்கள், வைத்தியசாலைகள் போன்றன வெள்ளத்தால் மூடப்பட்டிருப்பதாகவும் ஊடகங்கள் தெரிவித்தன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--