Editorial / 2019 ஓகஸ்ட் 27 , பி.ப. 09:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட இஸ்ரேலிய ட்ரோன் தாக்குதல் ஒன்றானது, இராணுவப் பதிலளிப்பு ஒன்றை நியாயப்படுத்துகின்ற போர்ப் பிரகடனம் ஒன்று என லெபனான் ஜனாதிபதி மிஷெல் அன் தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற சந்திப்பொன்றில், லெபனானுக்கான ஐக்கிய நாடுகளின் சிறப்பு ஒருங்கிணைப்பாளர் ஜன் குபிஸிடமே நடைபெற்றது போர்ப் பிரகடனமொன்று என ஜனாதிபதி மிஷெல் அன் கூறியுள்ளார்.
இதேவேளை, இஸ்ரேலுடனான போர்ப் பதற்றம் விரிவடைவதைத் தவிர்க்க தமது அரசாங்கம் விரும்புவதாக லெபனானியப் பிரதமர் சாட் ஹரீரி நேற்று தெரிவித்தபோதும், லெபனானிய இறையாண்மையின் இஸ்ரேலின் மோசமான மீறலை சர்வதேச சமூகம் கட்டாயம் நிராகரிக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.
பெய்ரூட்டின் தென் புறநகரொன்றில் இஸ்ரேலினுடையது எனக் கூறப்படும் ட்ரோன்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை வீழ்ந்ததைத் தொடர்ந்து, இஸ்ரேலின் ட்ரோன்கள் தற்கொலை நடவடிக்கையொன்றில் இருந்ததாக ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹஸன் நஸருல்லா கூறியிருந்தார்.
இதுதவிர, ஹிஸ்புல்லா உறுப்பினர்கள் இரண்டு பேரைக் கொன்ற சிரியாவில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற இஸ்ரேலிய வான் தாக்குலுக்கு பதிலளிக்கப் போவதாகவும் ஹஸன் நஸ்ருல்லா உறுதியளித்திருந்தார்.
இதேவேளை, சிரியாவுடனான எல்லைக்கருகில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலொன்றுக்கும் இஸ்ரேலை ஈராக்கியின் பலம்வாய்ந்த ஹஷாட் அல்-ஷாபி படை குற்றஞ்சாட்டியிருந்தது.
இந்நிலையில், சிரியாவுடனான எலைக்கருகிலுள்ள கிழக்கு லெபனானிலுள்ள பலஸ்தீனத் தளமொன்றை இஸ்ரேலிய ட்ரோன்கள் நேற்று அதிகாலையில் தாக்கியிருந்ததாக லெபனானிய அரச ஊடகமான தேசிய செய்தி முகவரகம் தெரிவித்திருந்தது.
13 Jan 2026
13 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 Jan 2026
13 Jan 2026