2021 மார்ச் 03, புதன்கிழமை

பொம்பயோ, ட்ரம்ப் நிர்வாக அதிகாரிகளுக்கு தடை விதித்த சீனா

Shanmugan Murugavel   / 2021 ஜனவரி 21 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஐக்கிய அமெரிக்காவின் முன்னாள் இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பயோ உள்ளிட்ட அந்நாட்டின் 28 தனிநபர்கள் மீது சீனா தடைகளை விதித்துள்ளது.

சீனாவின் உள்விவகாரங்களில் தலையிட்டமை காரணமாகவே குறித்த தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஐ. அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் நேற்று பதவியேற்ற பின்னரே குறித்த தகவலை வெளிப்படுத்தும் சீன வெளிவிவகாரமைச்சின் அறிக்கையொன்று வெளிவந்துள்ளது.

குறித்த அறிக்கையின்படி ஐ. அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் வர்த்தக ஆலோசகர் பீற்றர் நவரோ, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் றொபேர்ட் ஓ பிரயன், கிழக்காசியா மற்றும் பசுபிக் விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் டேவிட் ஸ்டில்வெல், சுகாதாரச் செயலாளர் அலெக்ஸ் அஸார், ஐக்கிய நாடுகள் பிரதிநிதி கெலி கிராஃப்ட், முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்டன், முன்னாள் ஆலோசகர் ஸ்டீவன் பனொன் ஆகியோரே தடைகளை எதிர்நோக்கியுள்ளனர்.

இவர்களும், இவர்களது குடும்ப உறுப்பினர்களும் சீனா, ஹொங் கொங், மக்காக்குவுக்குள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், இவர்களுடன் இணைந்ந்த நிறுவனங்கள் சீனாவுடன் வர்த்தகத்தில் ஈடுபடுவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .