Editorial / 2018 ஜூன் 13 , பி.ப. 11:58 - 0 - {{hitsCtrl.values.hits}}

நீதியைத் தடுத்ததில் குற்றவாளியாக இனங்காணப்பட்டதையடுத்து, மாலைதீவுகளின் முன்னாள் ஜனாதிபதி மெளமூன் அப்துல் கயூமுக்கு 19 மாத சிறைத்தண்டனையை மாலைதீவுகள் நீதிமன்றமொன்று இன்று விதித்து தீர்ப்பளித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கயூமும் நீதியரசர் அப்துல்லா சயீட்டும் நீதிபதி அலி ஹமீட்டும் தங்களது அலைபேசிகளை பொலிஸ் விசாரணையொன்றுக்காக கையளிக்க மறுத்ததாகவே குற்றஞ்சாட்டப்பட்டிருந்த நிலையில் குறித்த குற்றச்சாட்டை அவர்கள் மறுத்திருந்தனர்.
இந்நிலையிலேயே, இவர்களுக்கு ஓராண்டும் ஏழு மாதங்களும் ஆறு நாட்களும் சிறைத்தண்டவை விதிக்கப்பட்டுள்ளது.
ஒன்பது அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, இவ்வாண்டு பெப்ரவரி ஐந்தாம் திகதி அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, ஆட்சிக் கவிழ்ப்பு குற்றச்சாட்டில் இவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டிருந்தனர். இவர்கள் மீது மேலும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றபோதும் அவற்றை இவர்கள் மறுக்கின்றனர்.
இவர்களின் வழக்கு விசாரணை, இவர்களின் வழக்கறிஞர்களின் புறக்கணிப்புக்கு மத்தியிலும் இடம்பெற்றிருந்தது.
இந்நிலையில், கருத்துத் தெரிவித்துள்ள சர்வதேச மன்னிப்புச் சபை, குறித்த தீர்ப்பை அரசியல் உள்நோக்கம் கொண்டுள்ளது என விமர்சித்துள்ளதுடன், விசாரணை சர்வதேச தரத்தில் இருந்திருக்கவில்லையெனக் கூறியுள்ளது.
இதேவேளை, இவ்வாண்டு செப்டெம்பரில் நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் உங்களது வாக்குகளைப் பயன்படுத்தி நீதியை நிலைநாட்டுங்கள் என மக்களை நாடாளுமன்ற உறுப்பினர் இவா அப்துல்லா வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், இலங்கை, மாலைதீவுகளுக்கான ஐக்கிய அமெரிக்க தூதுவர் அதுல் கெஷாப்பும் விசாரணையையும் தீர்ப்பையும் விமர்சித்துள்ளார்.
2 hours ago
14 Jan 2026
14 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
14 Jan 2026
14 Jan 2026