2020 பெப்ரவரி 18, செவ்வாய்க்கிழமை

லக்‌ஷர்-ஈ-தொய்பா பயங்கரவாதிகள் எண்மர் கைது

Editorial   / 2019 செப்டெம்பர் 10 , பி.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாக லஷ்கர்-ஈ-தொய்பா பயங்கரவாதிகள் எண்மர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தெற்கு காஷ்மிரின் சோபோரில் மூன்று நாட்களுக்கு முன் பயங்கரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் இரண்டு வயது சிறுமி உட்பட நான்கு பேர் காயமடைந்தனர். இத்தாக்குதலில் தொடர்புடைய லஷ்கர்-ஈ-தொய்பாவைச் சேர்ந்த எட்டுப் பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாக நேற்று கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட எண்மரும் அச்சுறுத்தும் வகையில் சுவரொட்டிகளைத் தயாரித்து பரப்பியதாக குற்றம் சாட்டப்பட்டனர். கைது செய்யப்படவர்கள் ஐஜாஸ் மிர், ஓமர் மிர், தவ்சீப் நஜார், இமிதியாஸ் நஜார், ஓமர் அக்பர், பைசான் லத்திப், டேனிஷ் ஹபிப் மற்றும் ஷோகட் அஹ்மத் மிர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து சுவரொட்டி அச்சடிக்க பயன்படுத்தும் கணினிகள், பிற உபகரணங்கள் சுவரொட்டிகளை பொலிஸார் பறிமுதல் செய்தனர். மேலும் மூன்று லஷ்கர் பயங்கரவாதிகளின் அறிவுறுத்தலால் தான் இந்த சுவரொட்டிகள் பரப்பப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

பயங்கரவாதிகளின் இச்செயல்கள் மக்களிடையே அச்சத்தை உண்டாக்குவதாகவும், காஷ்மிரின் அமைதியை சீர்குலைக்கும் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது. காஷ்மிர் விவகாரத்தால் இந்தியா, பாகிஸ்தான் பிரச்னை ஏற்படும் சூழலால் ஜம்மு காஷ்மிரில் கூடுதல் பாதுகாப்பு படைகள் அனுப்பப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .