Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
A.P.Mathan / 2011 ஒக்டோபர் 22 , மு.ப. 04:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த எட்டு வருடங்களாக அமைதியை நிலைநாட்டுவதற்காக ஈராக்கில் தங்கியிருக்கும் அமெரிக்க இராணுவத்தினரை இவ்வருட இறுதிக்குள் மீளப்பெற உத்தேசித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா நேற்று அறிவித்துள்ளார்.
ஈராக் பிரதம மந்திரி நொவூரி மாலிகியுடன் வீடியோ கலந்துரையாடலில் ஈடுபட்ட வேளையிலேயே பராக் ஒபாமா இந்த உறுதியினை வழங்கியிருக்கிறார்.
சாதாம் ஹுஸைனை தோற்கடித்ததன் பின்னர் ஈராக்கில் கிளர்ச்சிகள் ஏற்படாதவண்ணம் பாதுகாப்பதற்காக அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஐ; புஸ்ஸினால் அமெரிக்க படைகள் ஈராக்குக்கு அனுப்பி வைக்கப்பட்டன. கடந்த 8 வருடங்களாக அமெரிக்க இராணுவத்தினர் ஈராக்கில் தங்கியிருக்கின்றனர். இந்த எட்டு வருடங்களில் 4,408 இராணுவத்தினரை அமெரிக்கா இழந்திருக்கிறது.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வெகு விரைவில் நடைபெறவுள்ள நிலையிலேயே பராக் ஒபாமாவினால் இவ்வறிவித்தல் விடுக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
meenavan Saturday, 22 October 2011 07:40 PM
நினைத்ததில் பாதியை முடித்து விட்டீர்கள், மிகுதியை நிறைவேற்ற எண்ணம் இருந்தாலும்,பிச்சை வேண்டாம் நாயை பிடி என்ற நிலைமையில் வெளியேறித்தானே ஆக வேண்டும்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
6 hours ago
6 hours ago