2021 பெப்ரவரி 24, புதன்கிழமை

‘43 ஆபிரிக்க அகதிகள் மூழ்கினர்’

Shanmugan Murugavel   / 2021 ஜனவரி 21 , மு.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஐரோப்பாவை அடைய முயன்ற மேற்கு ஆபிரிக்க அகதிகள் குறைந்தது 43 பேர், லிபியக் கரையோரத்தில் நேற்று முன்தினம் மூழ்கியதாக ஐக்கிய நாடுகள் முகவரகங்கள் நேற்று ம் தெரிவித்துள்ளன.

கொந்தளிப்பான கடலில் குறித்த அகதிகளின் படகானது மூழ்கிய நிலையிலேயே இவர்கள் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், ஸுவஹ்ராவிலுள்ள கரையோரப் பாதுகாப்பால் தப்பித்த 10 பேர் மீட்கப்பட்டு கரைக்கு கொண்டு வரப்பட்டதாக புகலிடத்துக்கான சர்வதேச நிறுவனமும், ஐக்கிய நாடுகளின் அகதி முகவரகமான யு.என்.எச்.சி.ஆர்-உம் இணைந்த அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .