2020 ஓகஸ்ட் 12, புதன்கிழமை

‘51 சிரியப் படைவீரர்கள் கொல்லப்பட்டனர்’

Editorial   / 2020 பெப்ரவரி 12 , பி.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிரிய எதிரணியின் இறுதிப் பலம்வாய்ந்த இடத்தைக் கைப்பற்றும் நடவடிக்கையில் முன்னேற்றங்களைப் பெற்ற ரஷ்யாவால் ஆதரவளிக்கப்படும் சிரிய அரசாங்கப் படைகளுக்கெதிராக துருக்கியால் ஆதரவளிக்கப்படும் போராளிகள் தாக்கியதில் வடகிழக்கு சிரியாவில் 51 சிரியப் படைவீரர்கள் கொல்லப்பட்டதாக நேற்று  துருக்கி தெரிவித்துள்ளது.

குறித்த தகவலுக்காக தரையிலுள்ள தகவல்மூலங்களை துருக்கி பாதுகாப்பமைச்சு மேற்கோள்காட்டியுள்ளதுடன், இரண்டு சிரியத் தாங்கிகளும், ஒரு ஆயுதக் களஞ்சியமும் அழிக்கப்பட்டதாக மேலும் கூறியுள்ளது.

இந்நிலையில், முன்னதாக 2012ஆம் ஆண்டு சிரிய சிவில் யுத்தத்தின் ஆரம்ப நாட்களின் பின்னர் வடமேற்கு மாகாணமான இட்லிப்பிலிருக்கும் அலெப்போ – சிரியத் தலைநகர் டமஸ்கஸ்ஸுக்கிடையேயான எம்-5 பிரதான நெடுஞ்சாலையின் கட்டுப்பாட்டை சிரிய அரசாங்கப் படைகள் கைப்பற்றியதாக, பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகளுக்கான சிரியக் கண்காணிப்பகம் தெரிவித்திருந்தது.

எவ்வாறெனினும், மேற்படி தகவலை சிரிய அரச ஊடகம் குறிப்பிடவில்லை என்பதுடன், எம்-5 நெடுஞ்சாலைக்கு அருகே சில வட பகுதிகளில் மோதல் தொடருவதாக எதிரணித் தகவல் மூலங்கள் இதன் பின்னர் தெரிவித்திருந்தன.

இதேவேளை, சிரிய இராணுவக் ஹெலிகொப்டரொன்றை எதிரணி சுட்டு வீழ்த்தியதுடன், சிரிய அரசாங்கப் படைகளால் கைவிடப்பட்டதாக துருக்கி பாதுகாப்பமைச்சு தெரிவித்த நைரப் நகரை நோக்கி முன்னேறியிருந்தது.

துருக்கி ஆட்லறியால் பலம்பெற்றுள்ள எதிரணிப் போராளிகள், சரகெப்புக்கு அருகே சிரிய அரசாங்கத்திடம் இழந்த பகுதியில் முழுத் தாக்குதலை மேற்கொள்வதாக துருக்கி அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--