2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

’13 சோமாலியப் படைவீரர்கள் கொல்லப்பட்டனர்’

Shanmugan Murugavel   / 2020 ஒக்டோபர் 15 , பி.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சோமாலியத் தலைநகர் மொகடிஷுவுக்கு வடமேற்காகவுள்ள அஃப்கொயே மாவட்டத்துக்கருகிலுள்ள காடு, பண்ணை நிலங்களில் அல் ஷபாப் ஆயுதக்குழுவை சோமாலிய இராணுவம் தாக்கியதையடுத்து குறைந்தது 13 சோமாலியப் படைகள் கொல்லப்பட்டதாக இராணுவ அதிகாரி மேஜர் மொஹமட் அலி தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் தாங்கள் நான்கு ஆயுததாரிகளைக் கொன்றதாகவும், அல் ஷபாப்பைக் கொன்றதாகவும், பெரும்பாலான இராணுவம் திரும்பி வந்ததுடன், இரண்டு டசின் கணக்கான படைவீரர்களை அங்கு விட்டு வந்ததாகவும், மாலையில் தமது சில படைவீரர்களைத் தாக்கிய அல் ஷபாப் 13 பேரைக் கொன்றதாக மொஹமட் அலி மேலும் கூறியுள்ளார்.

தாக்குதலுக்கு உரிமை கோரியுள்ள அல் ஷபாப், தாங்கள் 24 படைவீரர்களைக் கொன்றதாகவும், மிகுதிப் பேர் தப்பி ஓடியதாக அக்குழுவின் இராணுவ நடவடிக்கைகள் பேச்சாளர் அப்டியாஸிஸ் அபு முஸாப் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X