2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

ஆர்ப்பாட்டங்களைத் தடைசெய்த தாய்லாந்து

Shanmugan Murugavel   / 2020 ஒக்டோபர் 15 , பி.ப. 01:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தாய்லாந்து மன்னர் மஹா வஜிரலொங்கன், முன்னாள் ஆட்சிக் கவிழ்ப்புத் தலைவரான பிரதமர் பிரயுத் சான் ஒச்சாவை இலக்கு வைத்த தீவிரமாகும் ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில் தாய்லாந்து அரசாங்கமானது ஆர்ப்பாட்டங்களை, உணர்ச்சி பூர்வமான செய்திகள் பிரசுரிப்பை இன்று தடை செய்துள்ளது.

இலங்கை நேரப்படி இன்று அதிகாலை 2.30 மணிக்கு அவசர காலச் சட்டம் அமுலுக்கு வந்த 30 நிமிடங்களுக்குள், பிரதமர் பிரயுத் சான் ஒச்சாவின் அகற்றல், புதிய அரசமைப்பொன்றை வலியுறுத்துவதற்காக அவரது அலுவலகத்துக்கு வெளியே முகாமிட்டிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கலகமடக்கும் பொலிஸார் முன்னேறியிருந்தனர்.

இந்நிலையில், மன்னராட்சியை மிகவும் விமர்சித்த ஆர்ப்பாட்டக்காரத் தலைவர்கள் இருவர் உள்ளடங்கலாக ஒத்துழைக்க மறுத்த 20 பேரளவானோர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மன்னரின் வாகனத் தொடரணிக்கான இடர் மற்றும் வளர்ச்சியடைந்து வரும் எதிர்ப்பு, பொருளாதாரப் பாதிப்பு, கொவிட்-19 பரவல் ஆபத்தைக் காரணங்காட்டி, ஐந்து அல்லது அதற்கு மேலான மக்கள் கூடுவதை தடை செய்கின்ற அவசரகால நடவடிக்கைகளை தாய்லாந்து அரசாங்கம் நியாயப்படுத்துகிறது.

நேற்றைய ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டிருந்தனர். அரசாங்க வதிவிடத்துக்கு அணிவகுத்துச் சென்ற அவர்கள், பிரதமர் பிரயுத் சான் ஒச்சா வெளியேறும் வரை அங்கிருக்கக் போவதாக தெரிவித்திருந்தனர். பெரும்பாலானோர் இரவு சென்றிருந்தனர். பொலிஸாரின் எதிர்ப்பைத் தவிர்த்து தடுப்புகளின் முன்னர் முன்னேற முயன்றோர் அகற்றப்பட்டிருந்ந்தனர்.

21 ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டதையடுத்து தாய்லாந்துத் தலைநகர் பாங்கொக்கில் மன்னரின் வாகனத் தொடரணி மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷெமெழுப்பியிருந்தனர். மகாராணி சுதிடாவைக் காவிச் சென்ற தொடரணியை நேற்று தாமதப்படுத்திய சில ஆர்ப்பாட்டக்காரர்கள் மூன்று விரல் மரியாதையை வழங்கியிருந்ததுடன், பொலிஸ் பாதுகாப்பு வாகனத்தை நோக்கி வெளியே போ என கோஷமிட்டிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X