Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2020 செப்டெம்பர் 09 , மு.ப. 10:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்றுக்கு தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பணியில் முன்னணி நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
இங்கிலாந்தின் ஒக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஆஸ்ட்ரா செனகா நிறுவனம் கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்தை தயாரித்தது.
மருத்துவ பரிசோதனையில் உள்ள AZD1222- என்ற இந்த தடுப்பூசிதான் உலக அளவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் தடுப்பு மருந்தாக அறியப்பட்டது.
கடந்த ஓகஸ்ட் 31 ஆம் திகதி அமெரிக்காவில் இந்த 30 ஆயிரம் தன்னார்வலர்களுக்கு ஆஸ்ட்ரா செனகாவின் தடுப்பு மருந்து பரிசோதிக்கப்பட்டது.
உலக அளவில் இறுதி கட்ட பரிசோதனையில் உள்ள 9 தடுப்பூசிகளில் ஆஸ்ட்ரா செனகாவும் ஒன்றாகும்.
இந்த நிலையில், தன்னார்வலருக்கு ஏற்பட்ட உடல் நலக்குறைவால் ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ளதாக மருந்து நிறுவனம் தெரிவித்துள்ளது.
முதல் மற்றும் இரண்டாம் கட்ட பரிசோதனைகள் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில், சந்தைக்கு வரக்கூடிய முதல் கொரோனா தடுப்பூசி இதுவாக இருக்கலாம் என கருதப்பட்டது.
எனினும் இன்னும் சில நாட்களில் பரிசோதனை மீண்டும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
2 hours ago