2021 ஜனவரி 27, புதன்கிழமை

எல்லேயில் சம்பியனானது ஹாட்லி

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 15 , மு.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-குணசேகரன் சுரேன்

வட மாகாணப் பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்று வரும் விளையாட்டுப் போட்டிகளின் எல்லே சுற்றுப்போட்டியில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி அணி சம்பியனாகியது.

வடமாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை திணைக்களத்தின் ஏற்பாட்டில் இந்த விளையாட்டுப் போட்டி நடைபெறுகின்றது.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வந்த இந்த எல்லே போட்டியின் இறுதிப்போட்டி கடந்த வாரம் நடைபெற்றது. இதில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி அணியும் சாவகச்சேரி இந்துக் கல்லூரி அணியும் மோதின.

50 பந்துவீச்சுக்களை கொண்ட இந்த எல்லே போட்டியில், முதலில் ஆடிய ஹாட்லி அணி 13 ஓட்டங்களைப் பெற்றது. பதிலளித்தாடிய சாவகச்சேரி அணி, 5 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

மூன்றாமிடத்தை வவுனியா புதுக்குளம் மகா வித்தியாலயம் பெற்றுக்கொண்டது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .